;
Athirady Tamil News

புற்றுநோய் அறிவிப்புக்கு பின்னரும் கேட் மிடில்டனை விடாது துரத்தும் சிக்கல்: காணொளி பொய்யாம்

0

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தமக்கு புற்றுநோய் பாதித்துள்ளதாக காணொளி வெளியிட்டுள்ள நிலையில், தற்போது அது உருவாக்கப்பட்ட காணொளி என்று சமூக ஊடகத்தில் ஆதாரங்களை பட்டியலிட்டுள்ளனர் சிலர்.

அவருக்கு எதிரான கருத்துகள்
கடந்த வெள்ளிக்கிழமை காணொளி ஒன்றை வெளியிட்ட வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன், தமக்கு புற்றுநோய் உறுதி செய்துள்ளதாகவும், கீமோ சிகிச்சை முன்னெடுக்க இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, உலகெங்கிலும் இருந்து அவருக்கு ஆதரவும் ஆறுதலும் பெருக்கெடுத்துள்ளது. ஆனால் சமூக ஊடகங்களில் அவருக்கு எதிரான கருத்துகள் பரவலாக மீண்டும் வலம்வரத் தொடங்கியுள்ளது.

ஏற்கனவே அன்னையர் தின புகைப்படத்தை திருத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். தற்போது, அவர் வெளியிட்டுள்ள காணொளியும் உருவாக்கப்பட்டது, புதிய தொழில்நுட்பத்தால் அது சாத்தியம் என்றும் சமூக ஊடகத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர் சிலர்.

அரண்மனை நிர்வாகம் நடவடிக்கை
தொடர்புடைய காணொளியில் ஏன் இலை கூட அசையவில்லை என்றும் வாதிடுகின்றனர். சிலர் கேட் மிடில்டனின் கன்னக்குழி இந்த காணொளியில் இல்லையே என குறிப்பிட்டுள்ளனர்.

இது பொய்யான காணொளி என குறிப்பிட்டுள்ள ஒருவர், மிகக் கொடூரமாக, கீமோ சிகிச்சை ஒன்றும் ஆபத்தானதல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், புகைப்பட சர்ச்சையில் கேட் மிடில்டன் சிக்கிய பின்னர், அவர் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டதாக சிலர் குறிப்பிடுகின்றனர்.

இதனாலையே, பொய்களை பரப்பும் பலர் ஆதாயம் பெறுவதாகவும் குறிப்பிடுகின்றனர். ஆனால் அரண்மனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தாமதமானதாலையே, கேட் மிடில்டனை விடாது சிக்கல் துரத்துவதாக சிலர் குறிப்பிடுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.