;
Athirady Tamil News

உலக கின்னஸ் சாதனை படைத்த சுவிஸ் நாட்டின் ஹைட்ரஜன் பயணிகள் ரயில்!

0

சுவிஸ் நாட்டின் ஸ்டாட்லர் நிறுவனம் உருவாக்கிய ஹைட்ரஜன் எரிபொருள் பயணிகள் ரயில்கள் இரண்டு நாட்கள் நிற்காமல் பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

ஸ்டாட்லர் நிறுவனம் தனது ஹைட்ரஜன் எரிபொருள் ரயிலை முதன் முதலில் பெர்லினில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் வர்த்தக கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது.

அதன் பிறகு பல முறை சோதனை நடத்தியது. இந்த சோதனைகளுக்கு பிறகு ஒரு முழு ஹைட்ரஜன் டேங்க் மூலம் 2,803 கிலோ மீட்டர் (1,741 மைல்கள்) பயணம் செய்துள்ளது.

கடந்த 20-ம் திகதி மாலை தொடங்கிய இந்த பயணம் இரவு மற்றும் அடுத்த நாள் முழுவதும் என தொடர்ந்து 46 மணித்தியாலங்கள் இயங்கியது.

இது தொடர்பில் ஸ்டாட்லர் நிறுவன துணைத் தலைவர் டாக்டர். அன்ஸ்கர் ப்ரோக்மேயர் கூறுகையில்,

இந்த உலக சாதனையானது எங்கள் ஹைட்ரஜன் ரெயிலின் சிறந்த செயல் திறனை காட்டுகிறது. இது மகத்தான சாதனை ஆகும். மற்றொரு உலக சாதனை படைத்ததில் நாங்கள் பெருமை அடைகிறோம் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.