ஒபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்: இஸ்ரேலை எச்சரிக்கும் ஈரானிய அதிகாரிகள்
ஈரான் நாட்டுக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் “பயங்கரமான மற்றும் ஒன்றுபட்ட” பதிலடியை வழங்க ஈரான் தயாராக இருப்பதாக ஈரானிய இராணுவத் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அப்தோல்ரஹிம் மௌசவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய இராணுவ தினத்தைக் குறிக்கும் வகையில், ஈரானின் ஆயுதப் படைகளின் வலிமைமிக்க தற்காப்பு மற்றும் தடுப்பு சக்தியை மௌசவி வலியுறுத்தி உரையாற்றுகையிலேயே இதனை கூறியுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் சிரியாவில் ஈரானின் இராஜதந்திர வளாகத்தின் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், IRGC படையினால் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பகுதிகளை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது.
ஒபரேஷன் ட்ரூ ப்ராமிஸ்
ஒபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் என்று பெயரிடப்பட்ட முன்னோடியில்லாத இந்த வான்வழித் தாக்குதல், இஸ்ரேலிய அதிகாரிகளை அச்சுறுத்திய வகையில் அமைந்திருந்தது.
இஸ்ரேலிய ஆட்சிக்கு எதிரான ஈரானின் நடவடிக்கை ஈரானிய ஆயுதப் படைகளின் தீர்மானம் மற்றும் திறனின் ஒரு பகுதியை மட்டுமே வெளிப்படுத்தியது என மௌசவி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நடவடிக்கை எதிராலியின் “சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு ஒரு தீர்க்கமான பதிலடி” என்றும் ஒடுக்கப்பட்ட நாடுகளுக்கு, குறிப்பாக பாலஸ்தீனம் மற்றும் காஸாவின் மக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
இஸ்லாமியர்களின் இராணுவ திறன்
இஸ்ரேலியர்கள் ஈரானிய பிரதேசத்தின் மீது தங்கள் கண்ணை தாக்குதல் வடிவில் செலுத்தினால் மிகவும் வலுவான பதிலடியை என ஈரானின் அரசியல் விவகாரங்களுக்கான துணை வெளியுறவு அமைச்சர் அலி பகேரி கனி எச்சரிகை விடுத்துள்ளார்.
வெளியுறவுக் கொள்கைக் குழுவின் நேர்காணலில் அலி பகேரி தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
”டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரகத்தின் தூதரகப் பிரிவு மீது தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேலிய படைகள் ஒரு மூலோபாயத் தவறைச் செய்துள்ளனர்.
இஸ்லாமியர்களின் இராணுவ மற்றும் பாதுகாப்புத் திறனை சர்வதேசம் அறிய வழிவகுத்துள்ளது.
இஸ்ரேலிய ஆட்சி நடவடிக்கை
எங்கள் தூதரகத்தின் தூதரகப் பிரிவை அவர்கள் தாக்காமல் இருந்திருந்தால், இந்த நிலைமைகள் எழுந்திருக்காது.
இஸ்ரேலிய ஆட்சி நடவடிக்கைகள் போதுமான பகுத்தறிவுடன் இருந்தால், அது அத்தகைய தவறை மீண்டும் செய்யாது.
ஏனெனில் ஈரான் இதையும் விட கடினமான பதிலடியை வழங்கும் என அவர்களுக்கு தெரியும்.
இஸ்லாமிய குடியரசு தனது நலன்களையும் தேசிய பாதுகாப்பையும் பாதுகாப்பதற்காக இஸ்ரேல் இராணுவத்தை தண்டிக்க முடிவு செய்தபோது, அவர்களின் அடுத்த தாக்குதலை எதிர்பதற்கான திட்டத்தையும் ஈரான் கொண்டிருந்தது” என்றார்.