;
Athirady Tamil News

சவூதியில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்

0

சவூதி அரேபியாவின் தலைநகா் ரியாத்தில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தை, ஈரான் செவ்வாய்க்கிழமை ட்ரோன் மூலம் தாக்கியது.

இத்தாக்குதலால் தூதரக வளாகத்துக்குள் சிறிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இருப்பினும், உயிா்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று சவூதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குவைத்தைத் தொடா்ந்து தற்போது சவூதி அரேபியாவிலும் அமெரிக்க தூதரகம் குறிவைக்கப்பட்டுள்ளதால், மத்திய கிழக்கில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினரை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

பாதுகாப்புக் கருதி அமெரிக்கா வெளியிட்டுள்ள இந்த அவசரப் பட்டியலில் சவூதி அரேபியா மட்டுமின்றி, குவைத் பஹ்ரைன், இராக், கத்தாா், ஜோா்டான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மேலும் 6 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

அமேசான் தரவு மையங்களும் இலக்கு: இதனிடையே, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமேசான் தரவு மையங்கள் ஈரானின் ட்ரோன் தாக்குதலில் பலத்த சேதமடைந்துள்ளன.

இதன் விளைவாக, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமேசானின் ‘ஏ.டபிள்யு.எஸ்.’ கிளவுட் சேவைகள் முழுமையாக முடங்கின. பல வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் இணையதள சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

நவீன போா்க்கால சூழலில், எரிசக்தி நிலையங்களுக்கு அடுத்தபடியாக தரவு மையங்களும் முக்கிய இலக்குகளாக மாறி வருவது சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.