வெளிநாடொன்றில் கனமழை மற்றும் மின்னல் தாக்கத்தினால் 39 பேர் பலி

தென்மேற்கு பாகிஸ்தானில் பெய்த கனமழை மற்றும் மின்னல் விபத்துகளால் 39 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, இறந்தவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் என்றும், அறுவடை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, அங்கு தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஏராளமான விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
போக்குவரத்து
மேலும், சீரற்ற காலநிலையினால் மின்சார விநியோகம் மற்றும் போக்குவரத்து சேவைகளும் தடைப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், 2022 ஆம் ஆண்டில், பாகிஸ்தானை பாதித்த வெள்ளத்தால் ஏற்பட்ட விபத்துகளால் 1700 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.