;
Athirady Tamil News

அதிகரிக்கும் பதற்றம்: ஈராக் இராணுவ தளமொன்றின் மீது வான்வழி தாக்குதல் – நிராகரிக்கும் அமெரிக்கா

0

மத்திய கிழக்கில் தொடர்ந்து வரும் பதற்றங்களுக்கு இடையில் ஈராக்கில் உள்ள இராணுவ தளமொன்றின் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

நேற்றையதினம் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலினால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலானது, ஈரான் ஆதரவு பெற்ற மக்கள் அணிதிரட்டல் படையின் (Popular Mobilization Forces-PMF) தலைமையகத்தின் மீது நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா மறுப்பு
குறித்த தாக்குதலை நடத்தியவர்கள் தொடர்பில் எந்த தகவல்களும் வெளிவரவில்லை என்பதுடன் தாக்குதலுக்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் மீது PMF அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனினும், இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளதுடன் இஸ்ரேலும் தாக்குதல் தொடர்பான தனது பங்கை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

விசாரணை
ஈரான் ஆதரவு பெற்ற மக்கள் அணிதிரட்டல் படையான PMF படையானது 2014-இல் ISIS-ஐ எதிர்த்துப் போராட உருவாக்கப்பட்ட நிலையில், தற்போது ஈராக்கின் பாதுகாப்புப் படைகளின் ஒரு பகுதியாக காணப்படுகிறது.

இந்நிலையில், குறித்த தாக்குதல் தொடர்பில் ஈராக் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.