;
Athirady Tamil News

இலங்கை மக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

0

இலங்கையில் 46 சதவீத பெண்களும் 10 சதவீத பாடசாலை மாணவர்களும் உடல் பருமனுடன் இருப்பதாக சுகாதார அமைச்சு (Ministry of Health) எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த தகவலை சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மகிபால (Palita Mahipala) தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு சுகாதாரம் தொடர்பான விடயங்கள் குறித்து விளக்கமளிக்கும் விரிவுரையின் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதய நோய் மற்றும் பக்கவாதம்
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் (srilanka) 89 சதவீதமான மரணங்கள் புற்றுநோய், இதய நோய், நுரையீரல் நோய் மற்றும் நீரிழிவு போன்ற தொற்றா நோய்களால் ஏற்படுகின்றது.

இதில் பெரும்பாலான இலங்கையர்கள் இதய நோய் (heart disease) மற்றும் பக்கவாதம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

வருடாந்தம் சுமார் 60,000 இலங்கையர்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் கடந்த வருடம் 4,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை தொற்றாத நோய்களுக்கு உடல் பருமன் ஒரு முக்கிய காரணியாக இருப்பதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர் பாலித மகிபால குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.