;
Athirady Tamil News

புற்றுநோய் கண்டறியப்பட்டபின் வெளியான இளவரசி கேட்டின் உருவப்படம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

0

பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டையில் பிரசுரிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பிரித்தானிய இளவரசி கேட்டின் உருவப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால், அதைப் பார்த்த அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வெளியான இளவரசி கேட்டின் உருவப்படம்
Tatler magazine என்னும் பத்திரிகை, தனது ஜூலை மாத இதழின் அட்டைப்படமாக வெளியிடுவதற்காக இளவரசி கேட்டின் ஓவியம் ஒன்றைத் தேர்வு செய்துள்ளது. Hannah Uzorhas என்னும் பெண் ஓவியர் வரைந்துள்ள அந்த ஓவியத்துக்கு ‘The Princess of Wales – A Portrait of Strength and Dignity’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

அதாவது, தனக்கு புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இளவரசி கேட் கூறும் வீடியோ, மற்றும் 2022ஆம் ஆண்டு மன்னர் சார்லஸ் பதவியேற்றதும் அளித்த முதல் அரசு முறை விருந்தில் கலந்துகொண்ட இளவரசி கேட்டின் புகைப்படங்கள் ஆகிய இரண்டு விடயங்களின் அடிப்படையில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளதாக ஓவியர் Hannah Uzorhas தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சியில் ரசிகர்கள்
ஆனால், அந்த ஓவியத்தைப் பார்த்த இளவரசி கேட்டின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அது இளவரசி கேட்டைப்போல் இல்லவே இல்லை என்கிறார்கள் அவர்கள். அவர் அந்த குறிப்பிட்ட உடையை அணிந்திருப்பது போல அந்த ஓவியம் வரையப்படாதிருந்திருந்தால், அது யார் என்றே எனக்குத் தெரிந்திருக்காது என்கிறார் ஒருவர்.

மற்றொருவரோ, இளவரசி கேட்டின் உருவப்படம் இளவரசி கேட்டைப்போல் இருக்கவேண்டாமா என்று கேள்வி எழுப்ப, இன்னொருவர், நீங்கள் எங்கள் இளவரசியின் படத்தை உங்கள் பத்திரிகையின் அட்டையில் வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி, ஆனால், வருந்துகிறேன், அது அவரைப்போல் இல்லவே இல்லை என்கிறார்!

You might also like

Leave A Reply

Your email address will not be published.