;
Athirady Tamil News

போதனா வைத்தியசாலையாக மாற்றப்படவுள்ள வவுனியா வைத்தியசாலை: அதிபர் ரணில் உறுதி

0

வவுனியா (Vavuniya) வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக மாற்றப்படவுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தெரிவித்தார்

இதேவேளை வவுனியா பல்கலைக்கழகத்தில் (University of Vavuniya) புதிய மருத்துவ பீடமொன்று ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இன்று (26) மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட வைத்திய புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலைய திறப்பு விழாவில் கலந்துகொண்ட போதே அதிபர் இவ்வாறு உறுதியளித்தார்.

வடக்கை அபிவிருத்தி செய்தல்

மேல் மாகாணத்தை (Western Province) போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வட மாகாணத்தை (Northern Province) அபிவிருத்தி செய்வதே தமது நோக்கம் எனவும் அதிபர் மேலும் சுட்டிக்காட்டினார்.

எனவே அதற்காக கடந்த இரு வருடங்களில் வடக்கில் 4 மருத்துவ பிரிவுகள் திறந்து வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.