;
Athirady Tamil News

France Airlines-ன் 70 சதவீத விமானங்கள் ரத்து., முக்கிய பணியாளர்கள் வேலைநிறுத்தம்

0

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் ஓர்லி விமான நிலையத்தில் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 70 சதவீத விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக பிரான்சின் சிவில் ஏவியேஷன் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக சனிக்கிழமை அதிகாலை நான்கு மணி முதல் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை விமான சேவை நிறுத்தப்பட்டது.

விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பாரிஸில் உள்ள ஓர்லி சர்வதேச விமான நிலையம் காலியாக உள்ளது.

ஜூலை 26-ஆம் திகதி தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் வேளையில், பிரான்சின் இரண்டாவது பாரிய விமான நிலையமான ஓர்லிக்கான விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒரு மாதத்தில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, ஐரோப்பா முழுவதும் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

Orly விமான நிலைய அதிகாரிகளுக்கும் SNCTA விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் முக்கிய தொழிற்சங்கத்திற்கும் இடையேயான மோதல் முடிவுக்கு வந்தாலும், இரண்டாவது பாரிய தொழிலாளர் சங்கமான UNSA-ICNA விமான நிலையத்தில் பணியாளர்கள் குறைவாகவும், பணியாளர்கள் குறைவாகவும் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது.

இதே நிலை நீடித்தால், 2027-ஆம் ஆண்டுக்குள் பணியை நிர்வகிப்பதற்கு நிரந்தர பணியாளர்கள் இல்லை என கவலை தெரிவிக்கிறது. தற்போது ஒப்பந்த ஊழியர்களை வைத்து பணிபுரிவதாக கூறப்படுகிறது.

பணியிடங்களை நிரப்புவது குறித்து விளக்கம் அளிக்கும் வரை தங்களது கவலை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

French Airlines, Flights cancel, Paris Airport, Paris Olympics, Paris Orly airport, French civil aviation authority, Mass Strike, பிரான்சில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் வேலைநிறுத்தம்., 70 சதவீதம் விமானங்கள் ரத்து

இதனிடையே, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களின் வேலை நிறுத்தத்துக்கு பிரான்ஸ் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் ஏஜென்டுகளின் வார்த்தைகளை நம்பி விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டதாக பிரான்ஸ் விமானப் போக்குவரத்துத் துறை துணை அமைச்சர் பேட்ரிஸ் வெக்ரிட் தெரிவித்தார். போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.