;
Athirady Tamil News

பாரிஸ் நகர மேயர் அலுவலகத்தில் தீ விபத்து: இடிந்து விழும் அபாயத்தில் மணி கோபுரம்!

0

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள நகர மேயர் அலுவலகம் தீ விபத்தில் கடுமையாக சேதமடைந்துள்ளது.

பாரிஸ் நகரில் தீ விபத்து
பாரிஸ் நகரின் 12வது மாவட்டத்திலுள்ள நகர மேயர் அலுவலகம் திங்கள் அதிகாலை தீ பிடித்து எரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த 19-ஆம் நூற்றாண்டு கட்டிடம் கடுமையான சேதத்திற்கு உள்ளான நிலையில், இதன் மணி கோபுரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் காவல்துறைத் தலைவர் லாரண்ட் நூனெஸ்(Laurent Nunez) கூறுகையில், அதிகாலை 3:20 மணிக்கு கட்டடத்தின் கூரையில் தீ பற்றியது, தீயை அணைக்க சுமார் 150 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட நிலையில் காலையில் தீ அணைக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

இடிந்து விழும் அபாயம்
அத்துடன் இந்த தீ விபத்து காரணமாக மணி கோபுரத்தின் மேல் பகுதி இடிந்து விழும் அபாயம் இருப்பதாக நூனெஸ் எச்சரித்துள்ளார்.

இதனால் கட்டிடத்தின் சுற்றளவில் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.

இது தொடர்பான ஒரு அறிக்கையில், பாரிஸ் மேயர் அன்னே ஹிடால்கோ பாரிஸ் தீயணைப்புத் துறையின் “சிறந்த தலையீட்டை” பாராட்டினார். மேலும் “11வது மாவட்ட நகர மேயர் அலுவலகத்தில் அனைத்து பொது சேவைகளும் தொடர்ந்து வழங்கப்படும்” என்று அவர் குடியிருப்பாளர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

1876 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட 12வது மாவட்ட நகர மேயர் அலுவலகம், அதன் பிரதான நுழைவாயிலுக்கு மேலே 36 மீட்டர் (118 அடி) உயரமுள்ள ஒரு முக்கியமான மணி கோபுரத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.