புங்குடுதீவில் மாபெரும் வலைப்பந்தாட்ட பயிற்சி முகாம்
புங்குடுதீவு அனைத்து விளையாட்டு கழகங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கத்தினரால் புங்குடுதீவில் வலைப்பந்தாட்ட பயிற்சி முகாம் நடாத்தப்படவுள்ளது .
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வலைப்பந்தாட்ட விளையாட்டினை மேம்படுத்தும் நோக்கில் யாழ் மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கத்தினரால் எதிர்வரும் 08- 02 – 2025 அன்று புங்குடுதீவு மத்திய கல்லூரி மைதானத்தில் காலை 8 .30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை யாழ் மாவட்டத்தின் முன்னணி பயிற்சியாளர்களினால் மேற்படி பயிற்சி முகாம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்தோடு எதிர்வரும் மார்ச் மாதம் மகளிர் தினத்தினை முன்னிட்டு நடாத்தப்படவுள்ள 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான வலைப்பந்தாட்ட போட்டித் தொடருக்கான தெரிவும் அன்றைய தினம் இடம்பெறவுள்ளதால் புங்குடுதீவு பிரதேசத்தினை சேர்ந்த பாடசாலை மாணவர்களையும் இப்பயிற்சி முகாமில் கலந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் .
இந்நிகழ்வுக்கான நிதி அனுசரணையினை புங்குடுதீவு உலக மையம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் வழங்குகின்றமை குறிப்பிட்டத்தக்கது.
