;
Athirady Tamil News

பாடசாலை மாணவர்களால் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சிரமம்

0

அவசர அடிப்படையில் பாடசாலை மாணவர்களை கடவுச்சீட்டு பெற அனுப்புகின்றமையினால் குறித்த மாணவர்களுக்கும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுக்கும் பெரும் சிரமம் ஏற்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாடசாலை விளையாட்டு சங்கங்கள் உட்பட பாடசாலை அதிகாரிகள், இவ்வாறு அவசர அடிப்படையில் பாடசாலை மாணவர்களை கடவுச்சீட்டு பெற அனுப்புவதாக அந்த திணைக்களத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விளையாட்டு நிகழ்வுகள்
அதன்படி, அந்த மாணவர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கு தேவையான அடிப்படை ஆவணங்கள் கூட இன்றி, பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள தலைமையகத்திற்கு வருவதாக திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், விளையாட்டு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக வெளிநாடு செல்வதற்கு பாடசாலை மாணவர்கள் சில மணி நேரங்களுக்குள் தங்கள் கடவுச்சீட்டை சமர்ப்பிக்க வேண்டும் என்று பாடசாலை அதிகாரிகள் பரிந்துரைக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.