;
Athirady Tamil News

ஜேர்மனி நோக்கி புறப்பட்ட விமானத்தைக் கடத்திய பூனை: ஒரு சுவாரஸ்ய சம்பவம்

0

ரோமிலிருந்து ஜேர்மனி நோக்கிப் புறப்பட்ட ஒரு விமானத்தை பூனை ஒன்று தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது.

பூனையால் இரண்டு நாட்கள் தாமதமான விமானம்
Ryanair விமானம் ஒன்று ரோமிலிருந்து ஜேர்மனிக்கு புறப்பட இருந்த நிலையில், விமானத்தின் வயர்கள் செல்லும் பகுதிக்குள் ஏதோ விலங்கு நடமாடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அது என்ன என்று கண்டுபிடிப்பதற்காக விமானத்தின் பேனல்கள் பலவற்றை அகற்றி பராமரிப்புப் பணியாளர்கள் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார்கள்.

அப்போது, வயர்கள் செல்லும் இடத்தில் கருப்பு, வெள்ளை நிறம் கொண்ட ஒரு பூனை பதுங்கிருப்பது தெரியவந்துள்ளது.

பூனையை வெளியே எடுக்க முயலும்போது, அது மேலும் உள்நோக்கிச் செல்லவே, உடனே விமானத்தின் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீண்ட நேரமாக பணியாளர்கள் பூனையைத் தேடிக்கொண்டிருக்க, இந்த விமானப்பயணம் நடக்காது என்று பூனைக்குத் தெரியவந்ததோ என்னவோ, தானே விமானத்துக்குள்ளிருந்து வெளியேறி மெல்ல நடைபோட்டுச் சென்றுவிட்டது அந்தப் பூனை.

அதன் பிறகு இரண்டு நாட்கள் விமானத்தை தீவிர சோதனையிட்டு, அது புறப்படலாம் என அனுமதி கிடைத்தபின்னரே விமானம் புறப்பட்டுள்ளது.

விடயம் என்னவென்றால், விமானம் உயரத்தில் பறக்கும்போது அந்த பூனையால் பெரும் அபாயம் ஏற்படுமாம்.

அதனால் ஆயிரக்கணக்கான டொலர்கள் அளவுக்கு சேதமும் ஏற்படும் என்பதாலேயே அந்த விமானம் உடனே புறப்படுவது ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.