;
Athirady Tamil News

பூமியை தாக்கவிருக்கும் City-Killing குறுங்கோள்… கனேடிய விண்வெளி வீரரின் பீதி அளிக்கும் எச்சரிக்கை

0

பூமியை கண்டிப்பாக தாக்கும் என NASA அஞ்சும் City-killing குறுங்கோள் தொடர்பில் முன்னாள் விண்வெளி வீரர் ஒருவர் பீதியை ஏற்படுத்தும் விளக்கங்களை வெளியிட்டுள்ளார்.

டிசம்பர் மாதம் 22ம் திகதி
ஓய்வுபெற்ற கனேடிய விண்வெளி வீரர் கிறிஸ் ஹாட்ஃபீல்ட் என்பவரே City-killing குறுங்கோள் தொடர்பில் தமக்கிருக்கும் அச்சம் குறித்து வெளிப்படையாக எச்சரித்துள்ளார்.

NASA வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் 2024 YR4 குறுங்கோளானது 2032 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் திகதி பூமியை தாக்கவிருக்கிறது. ஆனால் பூமியை நேரிடையாக தாக்குவதற்கு 2.3 சதவிகித வாய்ப்புகளே இருப்பதாகவும் NASA குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய மதிப்பீடுகளின்படி, அதன் அளவு 130 முதல் 300 அடி அகலம் அல்லது அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையின் உயரத்திற்குச் சமம் என்றே குறிப்பிடுகின்றனர்.

இந்த குறுங்கோள் பூமியை தாக்கும் என்றால் அது 7.7 மெகாடன் TNT வெடிப்பதற்குச் சமமான தாக்கத்தை உருவாக்கும் என்றும் பூமியில் 3,000 அடி அகலமுள்ள பள்ளத்தை ஏற்படுத்தும் என்றும் ஹாட்ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.

அதாவது இது இரண்டாம் உலகப் போரின் போது வெடித்த மிகப்பெரிய குண்டை விட சுமார் 500 மடங்கு சக்தி வாய்ந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் நாம் ஒருவருக்கொருவர் ஏற்படுத்திய அழிவைப் பற்றி யோசித்துப் பாருங்கள், இது அதை விட 500 மடங்கு சக்தி வாய்ந்தது என்றார். NASA-வால் நிதியுதவி அளிக்கப்படும் அமைப்பு ஒன்று கடந்த டிசம்பர் மாதம் இந்த குறுங்கோளை அடையாளம் கண்டது.

இந்தியா முழுவதும்
பூமியிலிருந்து சுமார் 27 மில்லியன் மைல்கள் தொலைவில் முதலில் அதை அடையாளம் கண்டுள்ளனர். NASA உடனடியாக அச்சுறுத்தல் மிகுந்த குறுங்கோள்கள் பட்டியலில் 2024 YR4 குறுங்கோளை சேர்த்தது.

அத்துடன் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்த பிறகு அது உடைந்து போகாமல், பூமியின் மேற்பரப்பில் ஒரே துண்டாக மோதும் என்ற அச்சத்தை NASA பதிவு செய்தது.

இந்த மோதலால் ஏற்படக் கூடிய வெடிப்பு, வினாடிக்கு 10 மைல்களுக்கு மேல் வேகத்தில் பாறைத் துண்டுகளை வெளியே அனுப்பும். இது பூமியைச் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் வேகத்தை விட வேகமானது என்கிறார் கனேடிய விண்வெளி வீரர் கிறிஸ் ஹாட்ஃபீல்ட்.

தற்போது இந்த குறுங்கோள் எங்கே மோதும் என கணித்துள்ள விஞ்ஞானிகள், தோராயமாக தென் அமெரிக்காவிலிருந்து அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக துணை-சஹாரா ஆப்பிரிக்கா வரை, பின்னர் அரேபிய கடல் மற்றும் இந்தியா முழுவதும் என உறுதி செய்துள்ளனர்.

ஆனால், இதில் மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். மட்டுமின்றி, குறுங்கோள் 2024 பூமியைத் தாக்காமல் கடந்து செல்வதற்கான வாய்ப்புகளும் அதிகம் என்கிறார் கிறிஸ் ஹாட்ஃபீல்ட்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.