;
Athirady Tamil News

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டம் – 02 மணி நேரம் காக்க வைத்து வாக்குமூலம் பெற்ற பொலிஸார்

0

தையிட்டி விகாரை போராட்டம் தொடர்பாக செல்வராஜா கஜேந்திரன், வாசுகி சுதாகரன், வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் இன்றைய தினம் வியாழக்கிழமை பலாலி பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

தையட்டி விகாரையில் கடந்த 12 ஆம் தேதி மேற்கொண்ட போராட்டத்து தொடர்பில் விகாரையின் பிக்கு வழங்கிய முறைப்பாட்டிற்கு அமைய பொலிசாரால் குறித்த வாக்குமூலம் பெறப்பட்டது.

வாக்கு மூலம் அளிப்பதற்காக மூவரையும் இன்றைய தினம் வியாழக்கிழமை 12 மணிக்கு சமூகம் அளிக்குமாறு தெரிவித்த பொலிசார் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் அவர்களை காத்திருக்கச் செய்து அதன் பின்னர் அவர்களிடம் வாக்கு மூலம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தெல்லிப்பழைப் பிரதேச செயலாளர் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் குறித்த விகாரை அமைக்கப்பட்ட இடம் மக்களின் உறுதியுள்ள காணிகள் என்பதை அரச திணைக்களங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன.

என்ற விடயத்தை பொலிசாருக்கு தெரியப்படுத்திய நிலையில் தாம் குறித்த விகாரை அகற்றப்படும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என செல்வராஜா கஜேந்திரன் வாக்கு மூலம் அளித்த பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.