காட்டுயானை தாக்கி பரிதாபமாக இருவர் பலி
பொலன்னறுவை, அரலகங்வில பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அரலகங்வில வெஹெரகம பகுதியில் 72 வயதுடைய ஒரு ஆணும் 75 வயதுடைய ஒரு பெண்ணும் இவ்வாறு காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யானை தாக்குதலால் காயமடைந்தவர்கள் பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.