;
Athirady Tamil News

9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்!

0

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு திரும்புகிறார்.

அமெரிக்காவின் போயிங் உருவாக்கிய ஸ்டாா்லைனா் விண்கலம், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோருடன் சா்வதேச விண்வெளி நிலையத்தை கடந்த ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி அடைந்தது. ஒன்பது நாள்களுக்குப் பிறகு ஸ்டாா்லைனா் மூலமே அவா்கள் இருவரும் பூமிக்குத் திரும்புவதாக இருந்தது. இருந்தாலும், தொழில்நுட்பக் கோளாறு காரணாக அவா்களால் திட்டமிட்டபடி பூமி திரும்ப முடியவில்லை.

இதன் காரணமாக, அவர்கள் இருவரும் கடந்த 9 மாதங்களாக பூமிக்கு அப்பால் விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சா்வதேச விண்வெளி நிலையத்தில் பாதுகாப்பாக தங்கியிருந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில், அவர்கள் இருவரும் மார்ச் 16-ஆம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தில் பூமிக்கு அழைத்து வரப்படுவார் என்று நாசா தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.