பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் அமைச்சர் கலந்துரையாடல்

மகளிர் மற்றும் சிறுவர் அலுவலகள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்கள் தமது அமைச்சின் கீழ் கடமையாற்றும் பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் நேற்று(09) மாலை 06.00 மணிக்கு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இக் கலந்துரையாடலில் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் மற்றும் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் உடனிருந்தனர்.
இக் கலந்துரையாடலில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கடமைகளை மக்களுக்கு மேன்மேலும் வினைத்திறனாக வழங்குதல் தொடர்பாக அமைச்சர்கள் உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கி கலந்துரையாடியதுடன், உத்தியோகத்தர்களின் தேவைப்பாடுகளையும் கேட்டறிந்து நிவர்த்தி செய்வதாகவும் தெரிவித்தார்கள்.