;
Athirady Tamil News

திரைப்படத்தை நம்பி இரவு முழுவதும் தங்க புதையலை தேடிய மக்கள் – பரவும் வீடியோ

0

சாவா திரைப்படத்தால் பரவிய வதந்தியால் அந்த பகுதி மக்கள் தங்க புதையல் இருப்பதாக நம்பி இரவு முழுவதும் தேடியுள்ளனர்.

சாவா திரைப்படம்
சத்ரபதி சாம்பாஜி மகாராஜாவின் வாழ்கை வரலாற்றை சித்தரிக்கும் சாவா என்ற திரைப்படம் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, வசூலில் சாதனை படைத்தது வருகிறது.


இந்த படத்தில் விக்கி கவுசல், ரஷ்மிகா மந்தனா உள்ளிடோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தங்க புதையல்

இந்நிலையில் இந்த படத்தை பார்த்தவர்கள், முகலாயப் பேரரசின் அப்போதைய மையமான மத்தியப் பிரதேச மாநிலம், புர்ஹான்பூரில் உள்ள ஆசிர்கர் கோட்டைக்கு அருகில் தங்க நாணயங்கள் புதைக்கப்பட்டதாக வதந்தியைப் பரப்பினர்.

இதனையடுத்து நேற்று இரவு 7 மணியளவில், புர்ஹான்பூர் கோட்டைக்கு அருகே திரண்ட அந்த பகுதி மக்கள் சல்லடை மற்றும் தங்க உலோக கண்டுபிடிப்புக்கும் கருவியுடன், அந்த பகுதி முழுக்க தேட தொடங்கினர்.

அதிகாலை 3 மணி வரை அந்த பகுதி மக்கள் தீப்பந்தத்தை உதவியுடன் தேடியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவ தொடங்கிய நிலையில், காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

காவல்துறையினர் வந்த பிறகு அந்த பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். சட்டவிரோதமாக யாரும் அகழ்வாராய்ச்சியில் ஈடுபடக்கூடாது என காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆசிர்கர் கோட்டையில் புதையல்கள் உள்ளதாக புராணக்கதைகளுடனும் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு அதிகாரபூர்வமான ஆதாரம் இல்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.