3-ஆவது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ரூ.50,000 வெகுமதி!

இரண்டு குழந்தைகளுடன் நிறுத்திக் கொள்ளாமல் 3-ஆவது குழந்தை பெற்றுக்கொண்டால் அந்த தம்பதிக்கு ரூ.50,000 வெகுமதி வழங்குவேன் என்று இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் ஆந்திர பிரதேச எம்.பி. அப்பாலநாயுடு.
ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பி. அப்பாலநாயுடு தமது சம்பளத் தொகையிலிருந்து ரூ.50,000 வழங்குவதாக அறிவித்துள்ளார். பிறக்கும் குழந்தை பெண் எனில் ரூ.50,000 பரிசு ஆண் குழந்தை பிறந்தால் அந்த குடும்பத்துகு ஒரு பசு பரிசளிப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மகளிர் நாளையொட்டி விழியநகரத்தில் உள்ள ராஜீவ் விளையாட்டுத் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அப்பாலநாயுடு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.