;
Athirady Tamil News

புங்குடுதீவு கனடா ராஜாவின் பிறந்தநாளில் கற்றலுக்கான தேவைகருதி மழலைகளுக்கு தண்ணீர் போத்தல்கள் வழங்கும் நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

0

புங்குடுதீவு கனடா ராஜாவின் பிறந்தநாளில் கற்றலுக்கான தேவைகருதி மழலைகளுக்கு தண்ணீர் போத்தல்கள் வழங்கும் நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
§§§§§§§§§§§§§§§§

உதயன் அன்றில் ராஜா எனும் திரு.குணராஜா உதயராஜா

“தேசியத்தின் வலி செல்லும் தமிழன்
ஆசியாவைக் கடந்த ஆணழகன்
தாய் நாட்டில் நடந்த போரினால்
பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு,
ஊன்றுகோல் கொடுக்க
“நம் தாயகம்” அமைத்த செம்மல்,

பம்பலாக பலதும் பத்தும் கதைத்தாலும்
தமிழ் பாரம்பரியம் பேணும் பண்பாளன்..

புங்கை மண்ணில் பிறந்து, கனடாவில்..
அகவை காணும் நன்னாளில் பொங்கு தமிழால்
பூச்சூடி வாழ்த்துவோம் ராஜாவை..
இனிய பிறந்த வாழ்த்துக்களால் மாலையிட்டு..

கனடாவில் வசிக்கும் புலம்பெயர் உறவான புங்குடுதீவைச் சேர்ந்த உதயன் அல்லது ராஜா என அன்புடன் அழைக்கப்படும், திரு.குணராஜா உதயராஜா அவர்களின் இன்றைய ஐம்பதாவது பொன்விழா பிறந்ததினம் வன்னி எல்லைக் கிராமத்தில் மிகவும் சந்தோஷமாகக் கொண்டாடப்பட்டது.

இதன் நிகழ்வாக பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள், அவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் ஆகியோர் “திரு.உதயராஜாவின்” பிறந்தநாளை முன்னிட்டு கேக்வெட்டி, பிறந்தநாள் பாட்டுப்பாடி மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் சிற்றுண்டிகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், திரு.உதயராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு நிகழ்வில் கலந்து கொண்டோரில் அந்த முன்பள்ளிப் பாடசாலையின் மாணவமாணவிகளுக்கு கற்றலுக்கான தேவைகருதி மழலைகளுக்கு தண்ணீர் போத்தல்கள் வழங்கி வைக்கப்பட்டது சிறப்பான செயல்பாடாகும்.

மேற்படி நிகழ்வானது “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின்” நிர்வாகசபை உறுப்பினர்களில் ஒருவரும், புங்குடுதீவை சேர்ந்தவரும், கனடாவில் வசிப்பவருமான “சமூக தொண்டன்” திரு.குணராஜா உதயராஜா அவர்களின் ஐம்பதாவது பிறந்ததினம் என்பதினால் “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” நிர்வாக சபையின் நிதிப் பங்களிப்பில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கனடாவில் வசிக்கும் உதயராஜா அவர்களின் ஐம்பதாவது பிறந்ததினத்தை முன்னிட்டு வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட வவுனியா உக்குளாங்குளம் பாரதி முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் என்ற ரீதியில் கற்றலுக்கான தேவைகருதி மழலைகளுக்கு தண்ணீர் போத்தல்கள் வழங்கி வைக்கப்பட்டது.

முதல் நிகழ்வாக மாணவ சிறார்களும், பெற்றோர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டு உதயராஜா அவர்களின் சார்பாக கேக் வெட்டி பிறந்த நாள் பாட்டுப்பாடி மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.

பாரதி முன்பள்ளியின் பெற்றோர் சங்கத்தின் தலைவவி சுபாஸ்கரன் கார்த்திகா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஊடகவியலாளர் திரு.வரதராசா பிரதீபன் அவர்கள் நேரிய முறையில் ஒழுங்கமைபில் வவுனியா உக்குளாங்குளம் பாரதி முன்பள்ளியின் பெற்றோர் சங்க நிர்வாகத்தின் செயலாளர் திவ்வியா சுஜந்தன் அவர்களும், பொருளாளர் சங்கர் நிவேதா தலைமையிலும் இடம்பெற்றது.

சிறார்களின் பெற்றோர்களும் விருந்தினர்களாக இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

இன்றைய காலத்தின் தேவை கருதி கிராமம் தோறும் “உமா கிராம வீட்டுத் தோட்டத்தை” உருவாக்கி மக்களின் எதிர்கால வாழ்வுக்கு உதவிட வேண்டுமெனும் மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் முயற்சிக்கு புலம்பெயர் நாடுகளில் தமது நிகழ்வுகளை நடத்துவோரும் தொடர்ந்து உதவி வருவது மிகவும் சிறப்பம்சமாகும். அதேபோல் தேவையுடையோரை இனம்கண்டு வாழ்வாதார உதவிகளும், மாணவ செல்வங்களின் வளர்ச்சிக்காக கல்விக்கு கரம் கொடுப்போம் எனும் திட்டத்தின் கீழ் புலம்பெயர் உறவுகள் உதவி வருவதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இதேவேளை இன்றையதினம் நிகழ்வுகளில் கலந்து கொண்டோரினால் இன்றைய நாளில் தனது ஐம்பதாவது பிறந்தநாளைக் கொண்டாடும் திரு.உதயராஜாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

அந்தவகையில் இவருக்கும் தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ச்சியாக தாயக உறவுகளுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றமூடாக நிதிப் பங்களிப்பினை வழங்கி வருவதற்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி மன்றம்.. என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.
10.03 2025

புங்குடுதீவு கனடா ராஜாவின் பிறந்தநாளில் கற்றலுக்கான தேவைகருதி மழலைகளுக்கு தண்ணீர் போத்தல்கள் வழங்கும் நிகழ்வு.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.