;
Refresh

This website www.athirady.com/tamil-news/news/1765647.html is currently offline. Cloudflare\'s Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive\'s Wayback Machine. To check for the live version, click Refresh.

Athirady Tamil News

தேங்காய் திருட சென்ற இளைஞன் மிது துப்பாக்கிச்சூடு

0

குருணாகல் – வீரம்புகெதர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உஹுமீய பகுதியில் வீடொன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இளைஞன் ஒருவன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்றையதினம் (12) இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் குருணாகல் வாரியபொல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

26 வயதுடையவர் கைது
குறித்த இளைஞன் உஹுமீய பிரதேசத்திலுள்ள தென்னந்தோப்பு ஒன்றிற்குள் சென்று தேங்காய் திருட முயன்றுள்ளார்.

இதன்போது தென்னந்தோப்பின் உரிமையாளர் இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் காயமடைந்த இளைஞன் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான தென்னந்தோப்பின் உரிமையாளர் 12 ரக போர் துப்பாக்கியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வாரியபொல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவர் என தெரிவித்த வீரம்புகெதர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.