;
Athirady Tamil News

35 வருடங்களின் பின் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணம் பலாலி வீதி பொதுமக்களின் பாவனைக்காக இன்று திறப்பு

0

35 வருடங்களின் பின் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணம் பலாலி வீதி நிபந்தனைகளுடன் முற்றாக பொதுமக்களின் பாவனைக்காக இன்று திறந்து விடப்பட்டுள்ளது.

இராணுவத்தால் மூடப்பட்டிருந்த வசாவிளான் தொடக்கம் பலாலி கடற்கரை சந்தி வரையிலான பாதை நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புக் காரணங்களுக்காக குறித்த வீதியினூடாக நடந்தும், மிதிவண்டியினூடாகவும், நடந்து பயணிப்பதும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வாகனங்களினூடான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காலை 6 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை குறித்த பாதையை பொதுமக்கள் பயன்படுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதியினால் பயணிப்பவர்கள் வீதியின் இடையில் நிறுத்துதல் வாகனங்களைத் திருப்புதல், பயண நேரத்தில் புகைப்படம், காணொளி எடுத்தல், ஆகிய நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடைபயணம் மற்றும் பேருந்து தவிர்ந்த பாரவூர்திகள் குறித்த வீதியூடாக செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மணித்தியாலத்துக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் மாத்திரமே செல்ல முடிவதுடன் சாரதிகளுக்கான அடையாள ஆவணங்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதுடன் இவ்விதிமுறைகளை மீறுதல் சட்டவிரோதம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.