;
Athirady Tamil News

முயல் மோதி தீப்பிடித்த என்ஜின்., அமெரிக்க விமானம் அவசர தரையிறக்கம்

0

முயல் மோதி என்ஜின் தீப்பிடித்ததால் அமெரிக்க விமானம் அவசரமாக தரையிறக்கபட்டது.

அமெரிக்காவின் யுனைடெட் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் டென்பர் நகரத்திலிருந்து கனடாவின் எட்மண்டன் நகரம் நோக்கி சென்ற விமானம், இஞ்சின் தீப்பிடித்த காரணத்தால் அவசரமாக திரும்பி தரையிறங்க வேண்டிய சூழ்நிலையை எதிர்கொண்டது.

விமானம் புறப்பட்ட சில நிமிடங்களுக்குள் ஒரு விலங்கு மோதியது (அது ஒரு முயல் என நம்பப்படுகிறது). இதனால் வலது புற இன்ஜின் தீப்பிடித்ததாக தெரியவந்தது.

விமான இயக்குநர்களுடன் எட்டிய ஒலி பதிவில், “வலது இன்ஜினில் சிறிய தீப்பிழம்புகள் பறக்கின்றன போல தெரிகிறது,” என கூறப்பட்டது.

153 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் பயணித்த இந்த போயிங் 737-800 விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது. யாருக்கும் காயமில்லை.

இந்த சம்பவத்தை FAA (Federal Aviation Administration) விசாரித்து வருகிறது.

2023-ல் மட்டும் 20,000க்கும் மேற்பட்ட பறவை அல்லது விலங்கு மோதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 1988 முதல் இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளனர், 126 விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.