;
Athirady Tamil News

பாப்பரசர் இறுதிச்சடங்கில் இளவரசர் வில்லியம் மற்றும் ட்ரம்ப் நீல நிற உடை அணிந்த காரணம்

0

வத்திக்கானில் பாப்பரசர் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் டொனால்டு ட்ரம்ப் மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோர் கருப்பு அணியவில்லை என்பது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

ட்ரம்ப் அவமரியாதை
செயிண்ட் பீற்றர்ஸ் சதுக்கத்தில் கூடியிருந்த பெரும்பாலான பிரமுகர்கள் நேற்று பாரம்பரிய கருப்பு இறுதிச் சடங்கு உடையை அணிந்திருந்தனர். ஆனால் ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் வேல்ஸ் இளவரசர் வில்லியம் மட்டும் நீல வண்ணத்தில் உடை அணிந்திருந்தனர்.

இதைக் கவனித்த சமூக ஊடகப்பயனர்கள் பலர், ட்ரம்ப் அவமரியாதை செய்துவிட்டார் என கொந்தளித்துள்ளனர். ஒருவர் இதற்கான காரணம் கேட்டு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இன்னொருவர், தாம் மட்டும் தனித்துத் தெரிய வேண்டும் என்பதற்காக ட்ரம்ப் நீல வண்ணத்தில் உடை அணிந்து வந்ததாக குறிப்பிட்டுள்ளார். இன்னொருவர், ஜனாதிபதி பொறுப்பிற்கே தகுதியற்றவர் என குறிப்பிட்டுள்ளார்.

இன்னொருவர், மரியாதை செலுத்த தெரியாதவர் ட்ரம்ப் என பதிவிட்டுள்ளார். ஆனால் ஜனாதிபதி ட்ரம்ப் நீல வண்ணத்தில் உடை அணிந்துவர முதன்மையான காரணம் உள்ளது.

ட்ரம்ப் அல்லது இளவரசர் வில்லியம் இருவரும் கத்தோலிக்கர்கள் அல்ல. ரோமன் கத்தோலிக்க மதம் பாரம்பரியத்தில் மூழ்கியுள்ளது, இதனால் கத்தோலிக்க இறுதிச் சடங்கிற்கு என்ன அணிய வேண்டும் என்பதற்கு சில உறுதியான விதிகள் உள்ளன.

மதம் மீதான ஈடுபாடு
கத்தோலிக்க இறுதிச் சடங்கிற்கான பாரம்பரிய உடை கருப்பு, ஏனெனில் அது துக்கத்தின் நிறம், மேலும் இது இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் ஒரு வழியாகும்.

ஜனாதிபதி ட்ரம்ப் ஒரு மதப்பிரிவைச் சாராத கிறிஸ்தவர், இளவரசர் வில்லியம் இங்கிலாந்து திருச்சபையைச் சேர்ந்தவர். கருப்பு நிற உடை அணிய வேண்டாம் என்ற அவர்களின் முடிவு, அவர்களுக்கு கத்தோலிக்க மதம் மீதான ஈடுபாடு இல்லாததற்கான அடையாளமாக இருக்கலாம்.

மிக சமீபத்தில் வெள்ளை மாளிகையில் உடை விவகாரத்தில் ட்ரம்பால் கடிந்துகொள்ளப்பட்ட ஜெலென்ஸ்கியும் வத்திக்கானில் கருப்பு உடையில் காணப்பட்டார்.

ஜெலென்ஸ்கி கிறிஸ்தவரல்ல, அவர் ஒரு யூதர். ஜெலென்ஸ்கியின் அருகே இடம் ஒதுக்கப்பட்டிருந்த இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு நீல நிற உடை அணிந்திருந்தார், அவர் ஒரு இந்து.

You might also like

Leave A Reply

Your email address will not be published.