சீனாவில் 4 சுற்றுலா படகுகள் கவிழ்ந்ததில் 9 பேர் பலி

தென்மேற்கு சீனாவில் ஏற்பட்ட திடீர் சூறைக்காற்றில் சுற்றுலா படகுகள் கவிழ்ந்ததில் 9 பேர் பலியானார்கள்.
சீனாவின் மிக நீளமான நதியான யாங்சியின் துணை நதியான வு நதியின் மேல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை திடீர் மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்தது. தொடர்ந்து சூறைக்காற்றும் வீசியதால் நதியில் பயணித்த 4 சுற்றுலா படகுகள் கவிழ்ந்தன.
இந்த சம்பவத்தில் 9 பேர் பலியானார்கள். மேலும் ஒருவர் மாயமானார்.
முதலில் இரண்டு சுற்றுலா படகுகள் கவிழ்ந்ததாக ஆரம்ப அறிக்கைகள் தெரிவித்தன. பின்னர் நான்கு படகுகள் கவிழ்ந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன. மற்ற இரண்டு படகுகளில் பயணிகள் இல்லை.
அதில் இருந்த ஏழு பணியாளர்களும் பத்திரமாக கரை சேர்ந்தனர்.
திருவையாற்றில் சூறாவளி காற்றுடன் மழை: 500 ஏக்கர் வாழை மரங்கள் சேதம்!
நேரில் கண்ட ஒருவர் அரசுக்குச் சொந்தமான பெய்ஜிங் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ”தண்ணீர் ஆழமாக இருந்தது. ஆனால் சிலர் பாதுகாப்பாக நீந்திச் சென்றனர்.
இருப்பினும், சூறைக்காற்று திடீரென வந்தது, அடர்த்தியான மூடுபனி ஆற்றின் மேற்பரப்பை மறைத்தது” என்றார்.
காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்குமாறும் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்கை வழங்குமாறும் சீன அதிபர் ஷி ஜின்பிங் உத்தரவிட்டதாக அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
இதினிடையே கவிழ்ந்த படகுகள் ஒவ்வொன்றும் அதிகபட்சமாக சுமார் 40 பேரை ஏற்றிச் செல்லக்கூடியவை என்றும் சூறைக்காற்று வீசியதில் 80க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் விழுந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.