திருக்கோவில் விபத்தில் யாழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு
அம்பாறை திருக்கோவில் பொத்துவில் பிரதான வீதியில் வாகன விபத்து விநாயகபுரம் பகுதியை சேர்ந்த பொலிஸ் உத்தியோத்தர் உயிரிழந்துள்ளார்.
திருக்கோவில் காஞ்சரன்குடா அண்மித்த பகுதியில் நேற்று முன் தினம் (10) இரவு இடம்பெற்ற வாகனவிபத்தில் பொலிஸ் உத்தியோத்தர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பொலிஸ் உத்தியோத்தர் பத்பநாதன் யதர்ஷன் (வயது-31) என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
பிரதேச வீதியில் முச்சக்கர வண்டி ஒன்று வேக கட்டு பட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ள தாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸ்சார் மேற்கொண்டு வருகின்றனர்.