நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 30% மண்சரிவு அபாயத்தில்
நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 30% மண்சரிவு அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு இலங்கையில் தற்போது 14 மாவட்டங்கள் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயத்தைக் கொண்டிருப்பதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (12) நடைபெற்ற தற்போதைய வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர இதனை கூறினார்.
அதேவேளை , நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 30% மண்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.