இளம் முன்பள்ளி ஆசிரியைக்கு நேர்ந்த அசம்பாவிதம் ; தவிக்கும் குடும்பம்
புத்தளம், அட்டவில்லுவ பகுதியில் முன்பள்ளி ஆசிரியர் ஒருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் புத்தளம் வெளிவட்ட வீதியில் வசிக்கும் 31 வயதுடைய ஒரு குழந்தையின் தாயாவார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள்
குறித்த முன்பள்ளி ஆசிரியர் புத்தளம் நகரத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, எதிர் திசையில் திரும்ப முயன்றபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீது மோதியதில், அவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள இடம்பெற்று வருகின்றன.