பாகிஸ்தானில் நிலநடுக்கம்
பாகிஸ்தானில் திங்கள்கிழமை மூன்று மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
இது குறித்து பாகிஸ்தான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததாவது: சிந்து மாகாணம், கராச்சி நகரில் திங்கள்கிழமை மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
கடாப் பகுதிக்கு அருகே ஏற்பட்ட முதல் நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 3.2 அலகுகளாக பதிவானது. அதே இடத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் 3.6 அலகுகளாகப் பதிவானது.
பின்னா் மக்கள்தொகை அதிகம் கொண்ட குவைதாபாத் பகுதியில் 3.2 ரிக்டா் அளவு கொண்ட மூன்றாவது நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அந்த மையம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கங்களால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. அரேபிய, யூரோ-ஆசிய, இந்திய புவித்தகடுகள் உராயும் பகுதியில் பாகிஸ்தான் அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்க அபாயம் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது.