காணாமல்போன சுமேதாவை கண்டுபிடித்த அதிகாரிகள்

கடந்த மார்ச் மாதம் 7ஆம் திகதியன்று மரதன்கடவல, கலபிடகலாவில் நடந்த வீதி விபத்திற்குப் பிறகு காணாமல் போன ‘சுமேதா’ யானை மின்னேரியா தேசிய பூங்காவில் காணப்பட்டதாக செவ்வாய்க்கிழமை (10) அன்று தேசிய பூங்காவின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
லொறியுடன் மோதிய பின்னர் சுமேதா காணாமல் போயுள்ளது. சம்பவத்தைத் தொடர்ந்து, சிறப்புப் பணிக்குழு மற்றும் வனவிலங்கு அதிகாரிகள் இணைந்து விரிவான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட யானையின் தந்தங்களில் ஒன்று பாதிக்கப்பட்டுள்ளது. யானை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாவும் சிகிச்சை வழங்கப்படுகின்றது எனவும் பூங்காவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.