;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத்தூதரகம் நடத்திய இரத்ததான முகாம்: மரம் நடும் திட்டத்துடன் சமூக, சூழலியல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம்

0

சர்வதேச இரத்த தான தினத்தினை முன்னிட்டு , யாழ்ப்பாண இந்திய துணைத்தூதரகம் , யாழ் . போதனா வைத்தியசாலையுடன் இணைந்து இரத்ததான நிகழ்வினை நடாத்தி இருந்தது.

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இரத்த தான முகாமில் பலர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

இரத்த தான முகாமில் கலந்து கொண்டருக்கு , மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

சமூகத்தில் இரத்த தானத்தின் முக்கியத்துவத்தையும் , சூழலியல் பாதுகாப்பையும் ஒருசேர வலியுறுத்தும் நோக்குடனையே இந்த இரத்த தான முகாம் ஒழுங்கமைக்கப்பட்டதாக இந்திய துணைத்தூதரகம் தெரிவித்திருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.