;
Athirady Tamil News

உலக சமுத்திர தின விழிப்புணர்வு நடைபவனியும் அறிவுறுத்தல் நிகழ்வு

0
video link-
 

ஜூன் 8 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக சமுத்திர தினத்தையும் ஜூன் 6 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக சுற்றாடல் ஆகியவற்றை பாடசாலை மாணவர்கள் ஊடாக சமூகத்துக்கு கொண்டு சேர்க்கும் விழிப்புணர்வு மற்றும் அறிவுறுத்தல் நிகழ்வும் கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் நேற்று முன்தினம் ( 12) சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்திலும் அதனுடன் இணைந்த சுற்றுச்சூழல் பகுதியிலும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கடல் சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு பதாகைகள் அடங்கியதான விழிப்புணர்வு ஊர்வலமும் பாடசாலை சுற்றிவர உள்ள பகுதிகளில் இடம்பெற்றதுடன் ஊர்வலத்தின் இறுதியில் பாடசாலை மாணவர்களுக்கான அறிவுறுத்தல் விழிப்புணர்வுக் கூட்டம் இடம்பெற்றது. இதன் போது கடல் வளங்களின் முக்கியத்துவம் அது அசுத்தமாக்கப்படும் போது ஏற்படும் பாதிப்புகள் தொடர்பிலும் சுற்றாடல் சட்டங்கள் தொடர்பிலும் மாவட்ட கடல் சூழல் பாதுகாப்பு உத்தியோகத்தர் கி. சிவகுமார் வளவாளராக கலந்து கொண்டு விளக்கமளித்திருந்தார்.

பாடசாலையின் அதிபர் டீ.கே.எம். சிராஜ் ஆலோசனைக்கு அமைய நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பாடசாலை பிரதி அதிபர் எம்.ஏ.எம். சிராஜ் தலைமை வகித்ததுடன் இணைப்பாடவிதானத்துக்கு பொறுப்பான உதவி அதிபர் எம்.பி.எம். பௌசான் இந்நிகழ்வுகளை நெறிப்படுத்தியிருந்தார். மேலும் இந்நிகழ்வில் பாடசாலை பகுதித் தலைவர்காளான யூ.கே.எம். முபாறக், ஏ.எம்.எம். ஸாஹிர் மற்றும் ஏ.ஜி.எ. அஜ்மல் ஆகியோருன் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்களுடன் கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.