;
Athirady Tamil News

உச்சமடையும் கொரோனா பரவல்; ஞாயிறு முழு ஊரடங்கு? தமிழக அரசு

0

ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு குறித்து அரசு விளக்கமளித்துள்ளது.

ஊரடங்கு?
புதிய வகை கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மீண்டும் அச்சுறுத்தி வருகிறது. சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிக அளவில் பரவி வந்த கொரோனா, சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது.

அந்தவகையில் நாடு முழுவதும் 7,264 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் 220 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அரசு விளக்கம்
இந்நிலையில், தமிழ்நாட்டில் ஞாயிறன்று முழு ஊரடங்கை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவித்ததாக செய்தி வைரலானது. தற்போது இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், இது பழைய வீடியோ.

2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அறிவிப்பதாக வெளியான செய்தியை தற்போது வெளியான செய்தி போல் தவறாக பரப்பி வருகிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.