யாழ் பல்கலைக்கழக துணைவேந்தருடன் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு!

யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ரூ பற்றிக் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தருடன் சந்திப்பொன்றில் ஈடுபட்டார்.
பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் யாழ்ப்பாண விஜயத்தின் முதல் நாளான நேற்று முன்தினம், 17 ஆம் திகதி திங்கட்கிழமை, யாழ்ப்பாணத்தில் உள்ள ஜெற்விங் விருந்தினர் விடுதியில் உயர்ஸ்தானிகர் தனிப்பட்ட இரவு விருந்தொன்றில் துணைவேந்தரை அழைத்து அளவளாவினார்.
இந்தச் சந்திப்பின் போது, பிரித்தானியாவுக்கும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான ஆய்வு மற்றும் கற்றல் நடவடிக்கைகள் தொடர்பிலும், யாழ்ப்பாண இளைஞர்களின் எதிர்கால நடவடிக்கைகளில் பிரித்தானிய அனுசரணை பற்றியும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது என பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பதிவொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.