;
Athirady Tamil News

ஈரான் இஸ்ரேல் போர் ; இஸ்ரேலுக்கு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு சேதங்கள்

0

ஈரானுடன் நடந்த போரில் இஸ்ரேலுக்கு ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதாகவும், அது தங்களது நாட்டின் – பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி, அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் முக்கிய அணு மையங்கள் தகர்க்கப் பட்டதுடன், அணுஆயுத விஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலடி அளிக்கும் விதமாக ஈரானும் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் கடும் சேதமடைந்தன.

குறிப்பாக இஸ்ரேலின் வான் கவச பாதுகாப்பை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியது அந்நாட்டை அதிர்ச்சியடையச் செய்தது.

இந்நிலையில், ஈரான் ‘தாக்குதலில் இஸ்ரேலுக்கு ரூ.25 ஆயிரம் கோடி மதிப்புக்கு சேதம் ஏற்பட் டுள்ளதாக அந்நாட்டின் வரித்துறை இயக்குநர் ஷே அகரனோவிச் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நாடு தற்போது மிகப் பெரிய சவாலை சந்தித்து வருகிறது. இஸ்ரேலின் வரலாற்றில் இதுபோன்ற சேதத்தை நாடு இதுவரை சந்தித்ததில்லை.

ஈரான் தாக்குதலில் சேதமடைந்த கட்டிடங்க ளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

எனினும் சேதமடைந்த இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் ஆயுதங்களை கணக்கெடுத்தால் சேத மதிப்பு கூடுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இஸ்ரேல் நிதி மந்திரி பெசாலல் ஸ்மோட்ரிச் கூறுகையில், போரின் காரணமாக இஸ்ரேலுக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.