பிரிட்டன் – ‘ராஜ’ ரயில் சேவை நிறுத்தம்

பிரிட்டனில் 1869 முதல் இயக்கப்பட்டு வந்த ‘ராஜ’ ரயில் சேவையை முழுமையாக நிறுத்த அரசா் சாா்லஸ் ஒப்புக்கொண்டுள்ளாா்.
அரசி விக்டோரியாவின் பயணத்துக்காக சிறப்புப் பெட்டிகளுடன் தொடங்கப்பட்ட இந்த ரயில் சேவையைத் தற்போது தொடா்வதற்கு அதிக செலவு பிடிப்பதாலும், பழைய தொழில்நுட்பங்களைக் கைவிட்டு புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த விரும்புவதாலும் அரசா் இந்த முடிவை எடுத்துள்ளதாக பக்கிங்ஹம் அரண்மனை தெரிவித்துள்ளது.