;
Athirady Tamil News

பாடசாலை பேருந்திலிருந்து தவறி விழுந்த மாணவன் ; சாரதி மற்றும் நடத்துனருக்கு பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு

0

வீதியில் பயணித்துக் கொண்டிருந்த சிசுசெரிய பேருந்தின் மிதி பலகையில் இருந்து மாணவர் ஒருவர் விழுந்த சம்பவம் தொடர்பான விசாரணையில், ​​சாரதி மற்றும் நடத்துனரின் கவனக்குறைவான மற்றும் அலட்சியமாக வாகனம் ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று (03) பதிவாகியிருந்தது.

அதன்படி, வடமேற்கு மாகாண போக்குவரத்து ஆணைக்குழு இந்தப் பேருந்தில் பணியாற்றிய சாரதி மற்றும் நடத்துனரின் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.