யாழ்ப்பாணத்தில் ஆலய ஒலி மாசு கட்டுப்பாடு: மாவட்டச் செயலாளர் பிரதீபன் அதிரடி நடவடிக்கை
யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபனின் நடவடிக்கையால் நல்லூர் பகுதியில் அதிகளவு சத்தத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒலி அமைப்புகள் கட்டுப்படுத்தப்பட்டது .
இது குறித்து மேலும் தெரியவருவதாவது
நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆலயமொன்றில் கும்பாபிஷேகத்தையொட்டி முப்பதிற்கும் மேற்பட்ட ஒலிபெருக்கிகள் மூலம் ஒலி அமைப்பு மேற்கொள்ளபட்டிருந்தது .
இந்நிலையில் இது குறித்து யாழ் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபனுக்கு பொதுமக்கள் முறையிட்டனர்.
தொடர்ந்து கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் யாழ் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு மாவட்ட செயலாளர் இது குறித்து நடவடிக்கைகளை உடன் எடுக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் சட்டத்திற்கு விரோதமான முறையில் அமைக்கப்பட்டு அதிகளவு ஒலி அமைப்பை கொண்ட 30 ஒலிபெருக்கிகளை கைப்பற்றினர் .
இதனை தொடர்ந்து மேலதிக நடவடிக்கைகளை பொலிசார் எடுத்துள்ளனர். அதிகளவு ஒலி எழுப்பபடும் பொழுது சட்ட நடவடிக்கைகள் யாழ் மாவட்டத்தில் எடுக்கப்படும் என ஏற்கனவே யாழ்ப்பாண மாவட்ட சுற்றாடல் குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.