அப்துல் அஸீஸ் அன்ட் சன்ஸ் வெற்றிக்கிண்ணம் எதிர்வரும் 12 ஆந் திகதி ஆரம்பம்

அப்துல் அஸீஸ் அன்ட் சன்ஸ் வெற்றிக்கிண்ண மின்னொளி உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி எதிர்வரும் 12 ஆந் திகதி ஆரம்பமாகும் என இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் பிரதித்தலைவரும் அம்பாரை மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவருமான எம்.ஐ .அப்துல் மனாப் அறிவித்துள்ளார்.
இக்கிண்ணம் தொடர்பிலான நிரற்படுத்தல் நிகழ்வு மற்றும் விசேட செய்தியாளர் சந்திப்பு சனிக்கிழமை(5) இரவு சம்ஸ் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மருதமுனை ஏரிபொருள் நிரப்பு நிலையமான அப்துல் அஸீஸ் அன்ட் சன்ஸ் அனுசரணையில் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கம் ஏற்பாடு செய்து நடத்தவுள்ள கிழக்கு மாகாண முன்னணி கழகங்கள் பங்குபற்றும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிகள் எதிர்வரும் 12 ஆந் திகதி ஆரம்பமாகும்.இதற்கு பார்வையாளர்களிடம் எவ்வித பணமும் அறவிடப்படமாட்டாது.எனவே இச்சுற்றுப்போட்டியை காண வருகின்ற பார்வையாளர்கள் ஏற்பாட்டாளர்களுக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்க முன்வர வேண்டும்.
அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட நடுவர் சங்கம்இ மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்துடன் இணைந்து நடாத்தும் கிழக்கு மாகாண முன்னணி கழகங்கள் விளையாடும் மாபெரும் மின்னொளி உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியானது மிகவும் சுவாரசியமாக இருக்கும்.இப்போட்டி இரவு 10 மணியுடன் நிறைவு செய்யப்படும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவரும் முன்னால் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான எம்.ஐ.அப்துல் மனாப் அணுசரனையாளர் அப்துல் அஸீஸ் அன்ட் சன்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அப்துல் அஸிஸ் அப்துல் கபீல் அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் செயலாளரும் முன்னாள் மாநகர சபை உறுப்பினருமான வை.கே.றஹ்மான் அம்பாறை மாவட்ட நடுவர் சங்கத்தின் தலைமை நடுவராகவும் பீபா உதைப்பந்தாட்ட சர்வதேச நடுவராகவும் உள்ள உடற்கல்வி பயிற்றுவிப்பாளர் ஏ.எம்.ஜெப்ரான் உட்பட அம்பாறை மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் உயர்பீட உறுப்பினர்கள், நிர்வாகத்தினர், நடுவர்சங்கத்தின் உறுப்பினர்கள், நிர்வாகத்தினர், ஊடகவியலாளர்கன் என பலர் கலந்து கொண்டனர்.