;
Athirady Tamil News

யாழில். விபத்து – முல்லைத்தீவை சேர்ந்த முதியவர் உயிரிழப்பு

0

யாழ்ப்பாணத்தில் வீதியை கடக்க முற்பட்ட முல்லைத்தீவை சேர்ந்த முதியவர் மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு உடையார்கட்டு பகுதியை சேர்ந்த இளையதம்பி நந்தகுமார் (வயது 70) என்பவரே உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவில் இருந்து , அச்சுவேலி பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு முதியவர் வந்துள்ளார். அந்நிலையில் கடந்த 27ஆம் திகதி உறவினர் வீட்டுக்கு அருகில் வீதியை கடக்க முற்பட்ட வேளை மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்தார்.

படுகாயமடைந்தவரை மீட்டு , சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.