;
Athirady Tamil News

3 மில்லியன் யுவான் சொத்துக்கு அடித்துக்கொண்ட சகோதரன், சகோதரி: பின்னர் தெரிய வந்த அதிர்ச்சி

0

சீனாவில் தந்தையின் சொத்துக்கு சண்டையிட்ட சகோதரன், சகோதரிக்கு இருவருமே தத்துப்பிள்ளைகள் என தெரிய வந்த நிகழ்வு அரங்கேறியது.

3 மில்லியன் யுவான் சொத்து
தியான்ஜின் நகரைச் சேர்ந்த நபர் தனது இறப்பிற்கு முன், 3 மில்லியன் யுவான் சொத்தின் உரிமையை மகனுக்கு மாற்றியுள்ளார்.

அதே சமயம் தனது மகளுக்கு “நியாயமான இழப்பீடு” வழங்க வேண்டும் எனக்கு மகனுக்கு உயில் எழுதி வைத்துள்ளார்.

இந்த நிலையில் அவரது மகள் தனது சகோதரரிடம் சொத்துக்காக சண்டையிட்டுள்ளார். அப்போதுதான் அவர்கள் இருவருமே குறித்த தந்தையின் உயிரியல் பிள்ளைகள் இல்லை என்பது தெரிய வந்தது.

இழப்பீடு
இருவரின் பெற்றோர் தொடர்பிலான அறிக்கை ஒன்றில், “எங்கள் மகள் தத்தெடுக்கப்பட்டாள், ஆனால் நாங்கள் எப்போதும் அவளை எங்கள் சொந்தமாகவே நடத்தி வருகிறோம். எங்கள் பிற்காலத்தில் எங்களை கவனித்துக் கொண்டது எங்கள் மகன்தான். நாங்கள் அவருக்கு வீட்டைக் கொடுத்தோம். நீங்கள் இருவரும் உண்மையான உடன்பிறப்புகளைப் போல பழக முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்” என கூறப்பட்டுள்ளது.

இந்த முடிவை தத்தெடுக்கப்பட்ட மகள் எதிர்த்து நீதிமன்றத்தில் முறையிட்டார். பின்னர் இது சட்டப் போராட்டமாக மாறியது.

இதனைத் தொடர்ந்து இறுதி காலத்தில் பெற்றோரை கவனித்துக் கொண்ட மகனிடம் சொத்து இருக்கும் என்றும், அவர் சகோதரிக்கு 550,000 யுவான் (ரூ.66 லட்சம்) இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.