இலங்கைக்கு அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து கிடைத்த உயர் மதிப்புள்ள வாகனங்கள்
அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து இரண்டு உயர் மதிப்புள்ள விமான எரிபொருள் நிரப்பும் வாகனங்களை இலங்கை விமானப்படை (SLAF) பெற்றுள்ளது.
இவ்விடயம் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிப்பதாக உள்ளது.
இலவசமாக வழங்கப்பட்ட எரிபொருள் நிரப்பும் வாகனங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.
ஒரு அறிக்கையில், அமெரிக்க அரசாங்கம் மற்றும் அமெரிக்க தூதரகத்தின் பங்களிப்புக்காக இலங்கை விமானப்படை தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது.