;
Athirady Tamil News

தமிழர் பகுதியொன்றில் நீரோடைக்குள் நண்பனுடன் மது அருந்திய குடும்பஸ்தருக்கு இறுதியில் நடந்த சம்பவம்

0

புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாராக்குடிவில் பகுதியில் உள்ள சிறிய நீரோடைக்குள் இருந்து சடலமொன்று நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பசறையைச் சேர்ந்த 48 வயது மதிக்கதக்க ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பெயரில் கைது
இவர், முந்தல் – அங்குனவில் பகுதியில் உள்ள தும்பு தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றி வந்த வேளையில் நேற்றுமுன்தினம் தனது சம்பளத்தை பெற்றுக் கொண்டு தாராக்குடிவில் உள்ள சிறிய நீரோடைக்கு அருகில் அவரும் மற்றொருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையிலேயே பசறைப் பகுதியைச் சேர்ந்த நபர் நீரோடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். நீதிவானின் முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், சடலமாக மீட்கப்பட்டவருடன் இணைந்து மது அறிந்தியதாக கூறப்படும் நபர் ஒருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸாரும், புத்தளம் பிராந்திய பொலிஸ் தடயவியல் பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.