உலக சந்தையில் அதிகம் விரும்பும் இலங்கை மசாலா ; ஏற்றுமதியில் இலங்கைக்கு பெரும் வரவேற்பு
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மசாலாப் பொருட்களுக்கு உலக சந்தையில் அதிக கேள்வி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில், 2024 ஆம் ஆண்டு 888.74 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இலங்கையிலிருந்து மிளகு, கறுவா என்பன இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
இந்த பயிர்ச்செய்கைகள் மக்களிடமும் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.
எனினும், உள்நாட்டில், உரிய விலைக்கு இவற்றை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.