;
Athirady Tamil News

உத்தராகண்ட் பெருவெள்ளத்தில் காணாமல் போன கணவரை தேடி அலையும் மனைவி

0

உத்தராகண்ட் பெருவெள்ளத்தில் காணாமல்போன ஓட்டல் அதிபரை, அவரது மனைவி தேடி அலைகிறார்.

கடந்த 5-ம் தேதி உத்தராகண்டின் கங்கோத்ரி கோயிலுக்கு அருகே ஏற்பட்ட மேகவெடிப்பால் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் தரளி என்ற கிராமம் முழுமையாக அழிந்துள்ளது. கடந்த சில நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். சுமார் 150 பேர் மண்ணில் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தரளி கிராமத்தை சேர்ந்த சுபம் நெகி (32) அங்கு ஓட்டல் நடத்தி வந்தார். அவரது ஓட்டல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உள்ளது. அவரையும் காணவில்லை. அவரது மனைவி கோமல் (28) கடந்த சில நாட்களாக கணவரை தேடி அலைகிறார்.

இதுகுறித்து கோமல் கூறிய​தாவது: பெரு​வெள்​ளம் ஏற்​பட்​ட​போது நான் தரளி கிராமத்​தில்
இல்​லை. உத்​த​ரகாசிக்கு சென்​றிருந்தேன். வெள்ள பாதிப்பு குறித்து அறிந்​தவுடன் தரளி கிராமத்​துக்கு விரைந்து சென்று எனது கணவரை தேடி வரு​கிறேன். கட்​டுப்​பாட்டு அறை, மருத்​து​வ​மனை, உறவினர்​கள் வீடு​களில் தேடி அலைகிறேன். எனது கணவர் உயிரோடு இருக்​கிறா​ரா, இல்​லையா என்​பது தெரிய​வில்​லை.

கடந்த ஆண்டு ஜனவரி​யில் எங்​களுக்கு திரு​மணம் நடை​பெற்​றது. அவர் உயிரோடு இருப்​பார் என்று நம்​பு​கிறேன். எப்​படி​யா​வது அவரை தேடி கண்​டு​பிடிப்​பேன். இவ்​வாறு கோமல் கண்​ணீர்​மல்க கூறி​னார்.

.

மீட்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருக்​கும் ராணுவ கேப்​டன் குர்​பிரீத் சிங் கூறிய​தாவது: தரளி கிராமத்​தில் 300 ராணுவ வீரர்​கள் மீட்​புப் பணி​யில் ஈடு​பட்டு இருக்​கிறோம். சுமார் 80 ஏக்​கர் பரப்​பள​வில் 20 அடி முதல் 50 அடி உயரம் வரை சகதி மூடி​யிருக்​கிறது. சுற்​று​வட்​டார சாலைகள், பாலங்​கள் அனைத்​தும் சேதமடைந்து உள்​ளன. உத்​த​ரகாசி​யில் இருந்து கங்​கோத்ரி கோயிலுக்கு செல்​லும் பிர​தான சாலை மிக கடுமை​யாக சேதமடைந்​திருக்​கிறது.

இந்த சாலையை சீரமைக்க 4 நாட்​கள் வரை ஆகலாம். இதன்​பிறகே நவீன இயந்​திரங்​கள், கனரக வாக​னங்​களை தரளி கிராமத்​துக்கு கொண்டு வந்து சகதியை அகற்றி சடலங்​களை மீட்க முடி​யும். இவ்​வாறு கேப்​டன்​ குர்​பிரீத்​ சிங்​ தெரி​வித்​தார்​.

You might also like

Leave A Reply

Your email address will not be published.