;
Athirady Tamil News

நடுவானில் விமானத்தின் Cockpit கதவை திறந்த விமானி ; பதற்றமடைந்த பயணிகள்

0

இங்கிலாந்தின் லண்டனில் இருந்து அமெரிக்காவின் நியூ யார்க்குக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது.

அப்போது, விமானத்தை எப்படி ஓட்டுவது என்பதை அதே விமானத்தில் பயணித்த தனது குடும்பத்தினருக்குக் காட்டுவதற்காக விமானத்தின் காக்பிட்-ஐ (விமானி அறைக்கதவை) விமானி ஒருவர் திறந்து காட்டியுள்ளார்.

இந்த சம்பவத்தால் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

பொதுவாக, விமானக் கடத்தல் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்க பயணத்தின்போது காக்பிட் எப்போதும் பாதுகாப்பாக மூடப்பட்டிருக்கும்.

இந்நிலையில் விதிமுறைகளை மீறியதற்காக விமானி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

விமானியின் செயலை விமானியில் இருந்த மற்ற பணியாளர்கள் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்திடம் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.