தடம் புரண்ட புகையிரதம் ; பெரும் அவதியில் மக்கள்
கொழும்பு, கோட்டைக்கும் மருதானைக்கும் இடையில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதால், அனைத்து மார்க்கங்களிலும் தொடருந்து சேவைகள் தாமதமாகியுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, களுத்துறை தெற்கிலிருந்து மருதானை நோக்கி பயணித்த தொடருந்தில், வாதுவ அருகே இயந்திர கோளாறு ஏற்பட்டதால், கரையோர மார்க்கத்திலான தொடருந்து சேவைக்கு இடையூறு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.