;
Athirady Tamil News

டெல்லி பயங்கரம்! ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை! இளைய மகனைத் தேடும் போலீஸ்

0

தெற்கு டெல்லியின் சத்பாரி கார்க் கிராமத்தில், ஒரே குடும்பத்தில் தாய் – தந்தை மகன் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

கொலை செய்யப்பட்ட மூன்று பேரும் கழுத்தறுத்தும், கல்லால் தலையை நசுக்கியும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வீடு முழுவதும் ரத்தமாகக் காணப்படுவதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

கொலை செய்யப்பட்டவர்கள் பிரேம் சிங், அவரது மனைவி ரஜனி, மூத்த மகன் ரித்திக் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களது இளைய மகன் சித்தார்த் (22) காணவில்லை என்றும், அவர்தான் குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இது குறித்து காவல்துறைக்கு தகவல் வந்ததும், விரைந்து சென்ற காவலர்கள், வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் இருந்த இரண்டு உடல்களை பார்த்தனர். மற்றொருவர் மேல்தளத்தில் கொலை செய்யப்பட்டுக் கிடந்துள்ளார்.

உடல்களைக் கைப்பற்றி உடல் கூராய்வுக்காக அனுப்பி வைத்து, தடயங்களை சேகரித்தனர். அக்கம் பக்கத்தில் விசாரித்த போது, கொலை செய்யப்பட்ட தம்பதியின் இளைய மகன் சித்தார்த் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும், சந்தேகிக்கப்படும் சித்தார்த், மனநல சிகிச்சை பெற்று வந்ததற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளது. சுமார் 12 ஆண்டுகளாக அவர் சிகிச்சை பெற்று வருவதாக வீட்டில் கிடைத்த மருத்துவ சான்றிதழ்கள் தெரிவிக்கின்றன. இதனால், அவர் பயங்க மூர்க்கத்தனத்துடன் நடந்து கொள்வார் என்றும், அக்கம் பக்கத்தில் கூறியிருக்கிறார்கள்.

எனவே, சித்தார்த் எங்கிருக்கிறார் என்று காவல்துறை தேடி வருகிறார்கள். அவர் உண்மையைச் சொன்னால்தான், கொலை நடந்ததற்கான காரணம் தெரிய வரும் என்றும் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.